திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். பின்னர் இன்று மீண்டும் பொங்கல் விழாவை முடித்துக் கொண்டு தனியார் ஓட்டலுக்கு திரும்பிய அமித் ஷாவை அவர் சந்தித்தார்.
அப்போது மத்திய மந்திரியும், மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அமித்ஷாவை எஸ்.பி.வேலுமணி இரண்டாவது நாளாக இன்று மதியம் 12:40 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.பின்னர் 1.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு அமித்ஷா புறப்பட்டு சென்றார்.
Follow Us