கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று (28.12.2025) தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பசுமை தாயம் தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று பேசுகையில், “கடலூர் மாவட்டத்திலேயே இந்திய நாட்டிற்காக தியாகம் செய்த மக்கள் வாழும் பகுதி இது. யாரும் தங்கள் வாழ்ந்த வீடு, நிலம், குலதெய்வ கோவில் என அனைத்தையும் இந்திய திருநாட்டிற்காக தியாகம் செய்த மக்கள் வாழும் இடம் இது. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்துடன் இங்கு அமர்ந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கூட அங்கு வழங்கப்படவில்லை.
உங்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. நிலம் வழங்கியவர்கள் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். கரிவெட்டி, கற்றாழை உள்ளிட்ட கிராமங்களில் பசுமையாக விளைந்த விளைநிலங்களில் டிராக்டர் செல்லும் இடங்களில் ஜேசிபி இறக்கினார்கள். உங்களுக்காக என்.எல்.சி.க்கு எதிராக போராடியவர்கள் சிலர் மீது 70 வழக்குகள் கூட உள்ளது. அன்புமணி மீது கூட வழக்குகள் உள்ளது. ஏற்கனவே ஒரு சுரங்கத்தின் மூலம் நிலக்கரியை வெட்டி எரித்து சுற்றுச்சூழலை மாசு படுத்தி விட்டார்கள்.
இரண்டாவது சுரங்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது இன்னும் மூன்றாவது சுரங்கத்திற்கும் நிலம் எடுக்க ஆயத்தம் ஆகி உள்ளனர். இதனால் நச்சு காற்றைத்தான் சுவாசிக்கிறோம் நச்சு தண்ணீரைதான் குடிக்கிறோம் நிலமும் நச்சுத்தன்மையாக மாறிவிட்டது. அப்படித்தான் இந்த நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வந்து இந்த ஊரையே மக்கள் வாழ முடியாத மாவட்டமாக மாற்றிவிட்டது. நமது குழந்தைகளுக்கு நுரையீரல் பிரச்சனை நமக்கு இருதய பிரச்சனை சுவாச கோளாறு புற்றுநோய் கண் பார்வை கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்த என்எல்சி வெளியிடக்கூடிய நச்சுக்காற்றை சுவாசிப்பதனால் 7 வகையான புற்றுநோய் வருவதாக தெரிகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/28/anbumani-mic-3-2025-12-28-20-17-05.jpg)
இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களையே அகதிகளாக மாற்றி உள்ளார்கள்.இதனால்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஒரு லட்சம் ஏக்கர் அல்ல ஒரு ஏக்கர் நிலத்தில் கூட அவர்களால் இனி கை வைக்க முடியாது. நாங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறோம் அன்புமணி உங்களுடன் இருக்கிறார். ஒரு பிடி மண்ணை கூட அவர்களால் இங்கிருந்து எடுக்க முடியாது. ஆண் பிள்ளைகளை தான் குடிகாரர்கள் ஆக்கினீர்கள், அது போதாது என்று தற்போது பெண் பிள்ளைகளையும் குடிக்கு அடிமையாக்கி உள்ளீர்கள். இதுதான் மிகப்பெரிய சாதனை. வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியை தூர்வாரி சீரமைத்து இருந்தால் இப்பகுதியில் விவசாயம செழித்திருக்கும்.
பல்வேறு பகுதிகளுக்கு இதுவரை பேருந்து வசதி முழுமையாக இல்லை.போதை மற்றும் மது மதுப்பழக்கத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சாதாரண சண்டைகள் கூட கொலையில் முடியும் நிலைக்கு போதை பழக்கம் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு போதிய நீதிமன்றங்கள் கூட இல்லை. எனவே இங்குள்ள தாய்மார்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போதை பழக்கம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்குமே பாதிப்பு ஏற்படுகிறது. மது கடைகளை படிப்படியாக குறைக்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால் எதையும் செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் மது போதை இல்லாத நிலையை ஏற்படுத்த நீங்கள் அன்புமணி ராமதாஸோடு நிற்க வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/28/sowmiya-anbumani-2025-12-28-20-16-17.jpg)