உலகம் முழுவதும் தமிழ்ப் பணியாற்றும் சான்றோர் பெருமக்களைக் சிறப்பிக்கும் வகையில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய சான்றோர் பெருவிழாவில், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) சிறப்பு விருதுடன் பாராட்டப்பட்டது.

Advertisment

விருது வழங்கல் விழா

ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் விழாவின் முதல் நாளில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், SKTRA அமைப்பின் சிறந்த தமிழ்ப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் விருதும் பதக்கமும் வழங்கினார்.

Advertisment

SKTRA அமைப்பின் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி.சிவம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் துணைத்தலைவர்/இயக்குனர் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா முன்னிலையில் விருதினையும் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.


SKTRA - ஒரு அறிமுகம்

05 அக்டோபர் மாதம் 2024,  தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உருவான தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA), தமிழின் அறிவியலை உலகளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுகிறது.

Advertisment

நிர்வாகக் குழு

- தலைவர்: பேராசிரியர் ஆரோக்கியராஜ்
- துணைத் தலைவர்: கவிஞர் சகாய டர்சியூஸ் பீ
- செயலாளர்: முனைவர் ஞானராஜ்
- மக்கள் தொடர்பு செயலாளர் சாந்தி பிரான்ஸ்

அமைப்பின் நோக்கங்கள்

SKTRA அமைப்பு பல்வேறு முக்கிய நோக்கங்களுடன் செயல்படுகிறது:

தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் கல்வியை உலகளாவிய அளவில் மேம்படுத்துதல்.தமிழ்-கொரியா கலாச்சார உறவை வலுப்படுத்துதல்.தமிழ் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல்.உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒருங்கிணைத்தல். தென்கொரியாவின் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு. ஆராய்ச்சி கட்டுரை பயிற்சி மற்றும் சிறந்த கட்டுரைகளுக்கான பரிசுகள்

குறிப்பிடத்தக்க சாதனைகள்

மொழிபெயர்ப்பு அறிவியல் சிறப்பு கருத்தரங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் என்ற தலைப்பில் உலகளாவிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் உலகத் திருக்குறள் மாநாடு, கொரியா - 2024: நவம்பர் 8, 2024 அன்று செஜோங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில், 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ் இலக்கியத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தை பல்வேறு மொழி, இனவியல் மற்றும் சமூகங்களின் முன்பாக எடுத்துரைத்த ஒரு மைல்கல் நிகழ்வாக இது கருதப்படுகிறது. கொரியா-தமிழ் ஆய்வு தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகளாவிய திருக்குறள் கவிதைப் போட்டி. உலகம் முழுவதும் தமிழ் ஆர்வலர்களை ஈடுபடுத்தும் வகையில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.

தலைவரின் நன்றி உரை

SKTRA அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்கள், "தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த சிறப்பான அங்கீகாரம் கிடைத்ததற்கு தமிழ்நாடு அரசிற்கும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அங்கீகாரம் இன்னும் சிறப்பாக தமிழ்ப் பணிகளை முன்னெடுக்க எங்கள் அமைப்பிற்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது" என்று தெரிவித்தார்.