2026 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்வது, கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில கட்சிகள் தங்களது உறுப்பினர் பலத்தை நிரூபிக்க மாநாடு, பேரணி, நடைபயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் 5 தொகுதி ஒதுக்குவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடப் போவதாகவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisment