source says O panneerselvam met BJP leaders in Delhi
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கெடு விதித்திருந்தார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று (02-12-25) மாலை டெல்லிக்குச் சென்றார். அங்கு அவர், பா.ஜ.க மூத்த தலைவர்களைத் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளையும் சில தலைவர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல், கூட்டணி, புதிய கட்சி உள்ளிட்டவைப் பற்றி அவர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us