மது அருந்தி விட்டு தகராறு செய்து தொல்லை கொடுத்து வந்த மகனை தாய் தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவருடைய மகன் அரவிந்த் என்கிற அறிவழகன் மது போதைக்கு அடிமையான அரவிந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தாய் சசிகலாவிடம் தகாத முறையில் பேசி சண்டை போட்டு வந்து தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சசிகலா மகன் அரவிந்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். உறவினர்கள் சிலருடன் சேர்ந்து அரவிந்தை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து தாய் சசிகலா மற்றும் உறவினர்கள் ஐந்து பேர் என மொத்தம் ஆறு பேர் இந்த சம்பவத்தில் கைது செய்துள்ளனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை பெற்ற தாயே உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.