ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்த வினோத கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ரோஷன் நாராயணன் (24). சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் தந்தை மற்றும் சகோதரர் உடன் வசித்து வந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திருப்பதி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் ரோஷன் நாராயணன் வீட்டில் தனியாக இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisment

கோவிலுக்கு சென்று விட்டு பெற்றோர்கள் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் கதவு உள்பக்கம் மூடப்பட்டு கிடந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்த பொழுது ரோஷன் நாராயணன் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்த பொழுது ரோஷன் நாராயணன் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் தன்னுடைய காதுக்குள் யாரோ ஒருவர் அழைப்பது போல் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் சகோதரனிடம் சண்டையிட்டேன் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தாய் தந்தையும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment