எழுத்தாளர் திருமாவேலனின் 'தீரர்கள் கோட்டம் திமுக' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திராவிடம் என்று அழைப்பது உணர்வோடு வருகிறது. அதை நிரூபித்திருக்கும் வகையில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ப.திருமாவேலன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை பெரும் புலவர். திருமாவேலன் முரசொலியிலும் கலைஞர் டிவியிலும் பங்காற்றுகிறார். பொதுவாக மீடியாவில் இருப்பவர்கள் அதுவும் செய்தி தொலைக்காட்சியில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் இருப்பார்கள் என்று நமக்கு தெரியும். பிரேக்கிங் நியூஸில் இருக்கின்ற பரபரப்பையும் தன்னுடைய எழுத்துப் பணிக்கு பிரேக் எடுக்காமல் இப்படிப்பட்ட நூல்களை எழுதும் அவரை மனதார பாராட்டுகிறேன்.
திராவிட நாடு என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய எரிய திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டே இருப்போம். ஆதிக்கவாதிகளுக்கு அடிமை சேவகம் செய்வோருக்கு திராவிட இயக்கம் என்றாலே கசக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மேலெழுந்து வருவதைப் பார்த்து வன்மம் கொண்டிருக்கிறார்கள். சின்ன எப்ஐஆருக்கு கூட கட்சி மாறுகின்றனர்.அரசியல் புரட்சி அடையாளமாக திமுக விளங்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னே பயணிக்கிறது தமிழ்நாடு.'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/a5879-2025-12-22-20-04-14.jpg)