Advertisment

' சிலர் உயிரை வாங்குகின்றனர்; சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்'-ராஜகண்ணப்பன் பேச்சால் அதிர்ச்சி

563

dmk Photograph: (minister)

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலத்தில் நடந்த 'தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட  அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ''சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல வளர்ந்து வந்த இயக்கமாக திமுக இருக்கிறதே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அனைவரும் திமுகவில் இருந்தவர்கள் இல்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் 1967 வரை ஆட்சியில் இருந்தது இப்பொழுது வர முடியுமா? சொன்னால் கோபித்துக் கொள்வார்கள் கூட்டணியில் இருக்கிறார்கள்.  காங்கிரஸில் இருப்பவர்கள் சிலர் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Advertisment
கூட்டணி என்பது தலைவருடைய இஷ்டம். திமுகவை வீழ்த்துவதற்கு இனி ஒருவர் தான் பிறந்து வர வேண்டும். தவெக அந்த க இந்த க என யார் வந்தாலும் எதுவும் நடக்காது. சீட்டுக்காக கட்சி நடத்துபவர்கள் தான் அதிமுக. கூட்டணி ஆட்சி வருகிறது என்று பேசுகிறார்கள். முதலில் அதிமுக ஆட்சி வருகிறது என்று சொன்னார்கள். இப்பொழுது என்டிஏ கூட்டணி ஆட்சி வருகிறது என்கிறார்கள். கூட்டணி ஆட்சி எந்த காலத்திலும் வராது. கலைஞர் கொடுத்தாரா? காங்கிரஸ் காரங்கள் அழைத்தார்கள் என்றவுடன் கன்னியாகுமரிக்கு நான் சென்றேன். காங்கிரஸ் எம்எல்ஏ, அமைச்சர் எல்லாம் எந்த கட்சியும் பார்ப்பதில்லை. கூட்டணி கட்சிக்காரர்கள் கூப்பிட்டால் உடனே போகிறோம்'' என்றார்.
Advertisment
dmk alliance parties congress minister rajakannappan dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe