தமிழகத்தில் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மூன்றாம் நம்பர், நான்காம் நம்பர் காட்டன் சூதாட்டம் பரவலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் "குட்டி சிவகாசி" என்று அழைக்கப்படும் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செருவங்கி, காக்கா தோப்பு உள்ளிட்ட மற்றும் பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நம்பர் காட்டான் சூதாட்டத்தில் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமும் இது நடத்தப்படும் சூழலில் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் ஆகவே இதனை அரசும் காவல் துறையும் தடுத்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/25/siren-police-2026-01-25-16-27-43.jpg)