அரசு பள்ளியில் மாணவர்களை பாம்பு கடித்ததில் இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாடி விட்டு வகுப்பறைக்குள் சென்ற இரண்டு மாணவர்களை பாம்பு கடித்ததால் மாணவர்கள் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பள்ளியை சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளதால் மாணவர்களுக்கு பள்ளியில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து பெற்றோர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பக்கத்தில் தான் நாங்கள் வசிக்கிறோம். நேற்று காலையில் பசங்க வழக்கம்போல ஸ்கூல் போயிருக்காங்க. கிளாஸ் ரூமுக்குள்ள போய் இருக்காங்க. உள்ளே போனதுக்கு பின்பு பாம்பு உள்ளே இருந்துருக்கும் போல தெரியாமல் கால் வச்சு மிதிச்சுட்டாங்க. இதனால் ஒரு மாணவனை பாம்பு கடித்துள்ளது. இன்னொரு பையன் தட்டி விட்டுருக்கான் அவன் கையிலயும் கடிச்சிருக்கு. பின்னர் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க. 

இதுவரைக்கும் இந்த விஷயம் பெற்றோர்களைத் தவிர வேற யாருக்குமே தெரியாமல் போயிருக்கு. பள்ளியைச் சுற்றிலும் பார்த்தால் புதர் அண்டி கிடக்கிறது. கோழி குடல் எல்லாம் கொண்டு வந்து போட்டு வைக்கிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே கிடையாது'' என தெரிவித்துள்ளார்.

Advertisment