ஒரு வயது குழந்தை ஒன்று பாம்பை கடிதத்தில் பாம்பு உயிரிழந்த சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாம்பைக் கடித்த குழந்தை உயிர் பிழைத்ததுள்ளது.

பீகார் மாநிலத்தில் பெட்டிஹா எனும் கிராமத்தில் ஒரு வயதான கோவிந்தா என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது  நாகப்பாம்பு ஒன்று அருகே வந்துள்ளது. பயமறியா அந்த குழந்தை பாம்பை கையில் பிடித்துக் கடித்ததாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள மக்கள் இதுகுறித்து கூறுகையில், 'நாகப்பாம்பு மிக அருகில் சறுக்கிச் சென்றதாகவும், இதனால் கிளர்ந்தெழுந்த குழந்தை பாம்பை வாயில் நுழைத்து கடித்துக் கொன்றதாகவும். சம்பவம் நடந்த சில மணிநேரம் கழித்து, கோவிந்தாவின் நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது குடும்பத்தினர் முதலில் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து பெட்டிஹாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல பரிந்துரைக்கப்பட்டனர்' என தெரிவித்துள்ளனர்.

குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிந்தாவின் தாய் அருகில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது, பாம்பு தோன்றியதாகவும், பாம்பு வெளியே வந்ததும், குழந்தை அதை ஏதோ ஒன்றால் தாக்கி பின்னர் கடித்துக் கொன்றது என்றும் சம்பவத்தின் போது உடனிருந்து இதனைப் பார்த்த குழந்தையின் பாட்டி மாதேஸ்வரி தேவி கூறியுள்ளார்.