Advertisment

புகைபிடித்ததாக சர்ச்சை: சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி!

WhatsApp Image 2025-12-13 at 11.47.53 AM

இந்த ஆண்டிற்கான (2025) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் 15 அமர்வுகளுக்கு நடைபெறுகிறது. . இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே, பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர்ச்சியாக "வந்தே மாதரம்" மற்றும் "சார்(SIR)" குறித்தும் மிக நீண்ட விவாதங்கள் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும், மூத்த தலைவருமான சவுக்கதா ராய், ராஜ்யசபாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்., இது குறித்த விளக்கம் கேட்கையில்,  அவர் பாராளுமன்ற வளாகத்தில் புகை பிடித்ததாகவும், அந்த வீடியோ காட்சிகள் அதிவேகமாக பரவிய நிலையில், இந்த சர்ச்சையின் காரணமாக அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. மேலும் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் இந்தியாவில் இ-சிகரெட் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுக்கதா ராய் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து புகைபிடித்து வருவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதையடுத்து, அவை தலைவர் ஓம் பிர்லா அவர்கள் இவ்வாறாக நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. 

Advertisment

இது குறித்து  சவுக்கதா ராய்  அவர்களிடம் கேட்கும் பொழுது, அவர்கள் என் மீது தவறான குற்றசாட்டுகளை வைக்கிறார்கள். நான் பாராளுமன்ற வளாகத்தின் உள்ளே புகை பிடிக்கவில்லை. வளாகத்தின் வெளியில் தான் புகைபிடித்தேன். வளாகத்தினுள் தான் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வளாகத்தின் வெளியில் புகைபிடிப்பது தடை செய்யப்படவில்லை. எனவே என் மீது எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார். 

இருப்பினும் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசும் நாடாளுமன்ற அவையில், பிரச்சனைகள் குறித்து பேசாமல் இவ்வாறான தவறான செயல்களில், மக்கள் பிரதிநிதியே ஈடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இது ஒரு தவறான முன்னுதாரணம் எனவும் கூறப்படுகிறது.

MP Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe