அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் அதிக மழைப் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கன மழை பொழிந்துள்ளதால் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அதை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டபம் பகுதியில் உள்ள கலைஞர் நகர்ப் பகுதியில் மழை நீரானது கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் உத்தரவின் பேரில் இரண்டு மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.