Advertisment

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் திடீர் மாற்றம்!

sivaji

Sivaji Krishnamurthy's prison sentence suspended

திமுகவின் பிரபல தலைமைக் கழக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 3 சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 2023ஆம் ஆண்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து அதே ஆண்டின் போது வேறொரு திமுக மேடையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை குஷ்பு குறித்து அருவருத்தக்க விதமாகவும் ஆபாச வார்த்தைகளாகவும் பேசினார். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆளுநர் மீதான அவதூறு பேச்சு மற்றும் குஷ்பூக்கு எதிரான ஆபாச பேச்சு ஆகிய இரு வழக்குகளும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்குகளை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரேவதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது என்று கூறி கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அவருக்கு 3 ஆண்டுகள், 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய 1 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முறையாக பரிசீலிக்காமல் எழும்பூர் நீதிமன்றம் தனக்கு தண்டனை விதித்துள்ளதாகவும், அரசினுடைய உரிய அனுமதி இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாத நிலையில் காவல்துறை பதிவு செய்த இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

dmk Prison sentenced sivaji krishnamoorthy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe