Sivaganga Court acquits Minister Periyakaruppan in embezzlement case
சொத்துக்குவிப்பில் வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பெரியகருப்பனை சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைமையிலான தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக அமைச்சராக பெரியகருப்பன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.20 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பெரியகருப்பனின் தாய், மனைவி உள்ளிட்ட 5 பேரை சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், சிவகங்கை மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
Follow Us