sisters torture to Women looking for work are targeted in madhya pradesh
மத்தியப் பிரதேசம் மாநிலம், அப்​பாஸ் நகரில் வசித்து வருபவர்கள் அம்​ரின் மற்​றும் அப்​ரின். இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவர். இவர்கள், ஏழ்மையில் உள்ள வேலை தேடும் பெண்களைக் குறிவைத்து, அவர்களுக்கு மாதம் 10000 ரூபாய் சம்பளம் மற்றும் தங்குமிடம் தருவதாகக் கூறி சில பெண்களைத் தேர்வு செய்துள்ளனர். பின்னர், அவர்களைக் கட்டாயப்படுத்தி செல்வந்தர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். அதோடு, கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் அவர்களை வற்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, 21 மற்றும் 31 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் கடந்த 22ஆம் தேதி இரவு பாக் செவானியா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், ‘ஏழ்மையில் உள்ள நாங்கள் வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில், எங்களுக்கு இவர்கள் வேலைத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அங்கு, பல செல்வந்தர்களுடன் அவர்களின் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினர். பின்னர், மது போன்ற போதைப் பொருட்களைக் கொடுத்து, நாங்கள் மயக்க நிலைக்குச் சென்ற பின்னர் எங்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதே போன்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சத்​தீஸ்​கரை சேர்ந்த பெண் ஒருவர் வேலை நிமித்தமாக அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது யாசிர் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதே போல, மற்றொரு பெண் சந்​தன் யாதவ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, இங்கு நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அம்​ரின், அப்​ரின் ஆகியோர் அப்பெண்களை மிரட்டியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அம்​ரின் மற்​றும் அப்​ரின் உட்பட அவர்களது உதவியாளரான சந்​தன் யாதவ் என மொத்தமாக மூன்று போரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்​கில் தொடர்புடைய பிலால், சானு மற்​றும் யாசிர் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வரு​கின்​றனர். போலீஸ் நடத்திய விசாரணையில், இவர்கள், பல அப்பாவி இளம் பெண்​களை கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடு​படுத்தி அதிலிருந்து கிடைத்த பணத்​தின் மூல​மாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில், அம்​ரின், அப்​ரின் ஆகியோரின் போன்கள் ஆய்விற்கு உட்படுத்திய போது பல இளம் பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழுக்களை இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் குஜராத் மற்றும் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, இதன் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க் இருப்பதாக காவல்துறை சந்தேகித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Follow Us