Advertisment

எஸ்.ஐ.ஆர். பணி : மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

sir-final-release

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் (மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) இன்று (23.02.2026) வெளியிட்டனர். அதாவது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.

Advertisment

அதன்படி விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 14.97 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 97 ஆயிரத்து 417 பேர் ஆவார்கள். அதில், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 632 பேரும், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 28 ஆயிரத்து 539 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 246 பேரும் ஆடங்குவர். வரைவு வாக்காளர் பட்டியலை விட, இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 60 ஆயிரத்து 896 வாக்காளர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 20.15 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது மொத்த வாக்காளர்கள் 20 லட்சத்து 15 ஆயிரத்து 196 பேர் உள்ளனர் அதில் பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 23 ஆயிரத்து 976 பேரும், ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 91 ஆயிரத்து 527 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 293 பேரும் அடங்குவர். வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 68 ஆயிரத்து 437 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

eci

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலில்  மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 92 ஆயிரத்து 194 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 917 பேரும், ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 78 ஆயிரத்து 80 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 197 இடம்பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 65 ஆயிரத்து 270 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 60 ஆயிரத்து 36 பேர் ஆவார்கள். அதில் பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 55 ஆயிரத்து 144  பேரும், ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 511 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 381 பேரும் ஆவார்கள். இதன் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலை விட, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 514 வாக்காளர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர். 

sir-camp-model
கோப்புப்படம்

சிவகங்கை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 11.10 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 10 ஆயிரத்து 599 பேர் ஆவார்கள். இதில், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 526 பேரும், ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 44 ஆயிரத்து 35 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 38 பேரும் ஆவார்கள். வரைவு வாக்காளர் பட்டியலை விட, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 1லட்சத்து 4 ஆயிரத்து 398 வாக்காளர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 பேர் ஆவார்கள். அதில் பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 390 பேரும், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 51 ஆயிரத்து 16 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 144 பேரும் உள்ளனர். இதில் வரைவு வாக்காளர் பட்டியலை விட, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 78 ஆயிரத்து 615 வாக்காளர்கள் கூடுதலாக இணைந்துள்ளனர்.

election commision of india voter list special intensive revision
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe