SIR work disrupted in shocking voter list
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த 23 ஆம் தேதி இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில், மதுரவாயல் தொகுதி பாகம் எண் 80-ல் உள்ள வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் மணிராஜ் என்ற வாக்காளர் பெயர், ஒரே முகவரியில் ஏழு முறை வெவ்வேறு வாக்காளர் எண்ணுடன் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த சிறப்பு வாக்காளர் திருத்த வாக்காளர் பட்டியல் நடவடிக்கையில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த எஸ்ஐஆர் பணிகளில் பெரிய அளவிலான குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து பெயரைப் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம் எனக் கூறியது. இதன் பின்னர், தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பட்டியலைச் சரிபார்த்தது. இவ்வாறு, எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இவ்வளவு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us