Advertisment

''சார் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க...'' நள்ளிரவில் பதிவான பகீர் சிசிடிவி காட்சி-போலீசார் வெளியிட்ட தகவல்

a5771

'Sir please help...' CCTV footage of a bus driver in the middle of the night - information released by the police Photograph: (cctv)

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் டூ ஜெகதேவி சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பெண் ஒருவர் நள்ளிரவில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட ஒரு சிசிடிவி காட்சியில் நள்ளிரவு இரண்டு மணியளவில் தனி ஆளாக நடந்து வந்த அப்பெண் தனக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி வீட்டின் கேட்டை தட்டி ''எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார்... ஹெல்ப் பண்ணுங்க...'' என கூச்சலிட்டுள்ளார்.

Advertisment

கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என யாரும் கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார். அதேநேரம் அதேபகுதியில் பதிவான மற்றொரு சிசிடிவி காட்சியில் சாலையின் ஓரத்தில் இருந்த ஆண் ஒருவருடன் அந்தப் பெண் பேசிய காட்சியும் இடம் பெற்றிருந்தது.

Advertisment

வீட்டில் கதவை தட்டிய அந்த பெண் யார்? அந்த ஆணுடன் ஏன் அவர் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் மிட்டஹல்லி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அப்பெண்ணின் கணவரான பாக்யராஜ் என்பவர் வேறொரு பெண்ணுடன்  தொடர்பில் இருந்ததால் இவர் தட்டிக் கேட்டதால் பாக்யராஜும் அவரது வீட்டாரும் தாக்கியுள்ளனர் என்பதும் தெரிந்தது.

தாக்குதலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு நடந்து சென்ற அப்பெண் தாகம் ஏற்பட்டதால் அங்கிருந்த வீடுகளில் தண்ணீர் கேட்டு உதவி கேட்டுள்ளார் . ஆனால் உதவி கேட்பதாக அழைத்துக் கொள்ளையடிக்க வந்திருக்கும் நபர்களாக இருக்கும் என அச்சத்தில் அந்த பகுதி மக்கள் கதவை திறக்காதது தெரியவந்துள்ளது. தற்பொழுது அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு சாதாரண சம்பவம் தான் எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணை தாக்கிய பாக்யராஜ் மற்றும் அவருடைய தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CCTV footage Krishnagiri police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe