village Photograph: (erode)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் ஈரோடு கலெக்டர் கந்தசாமிக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள சாயத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் உள்பட தொழிற்சாலைகளும் கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் ஆர்.ஓ.வை முறையாக செயல்படுத்தாமல் நிலத்தில் சாக்கடையில் நீர்நிலைகளில் விட்டு விடுகிறார்கள். இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. எந்தவித நிரந்தர தடுப்பு நடவடிக்கை இல்லை. எனவே சுற்றுப்பகுதி கிராம மக்கள் குடிநீர் இன்றி சிரமப்படுகிறார்கள். புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே முழுமை கழிவுநீரை தடை செய்ய நிரந்தர தீர்வு காண வேண்டும் அல்லது சிப்காட்டை முழுவதுமாக மூட வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட சென்னிமலை பெருந்துறை வட்டார கிராம மக்களுக்கு முகாசி பிடாரியூர், வரப்பாளையம், வாய்ப்பாடி, பொன்முடி, மணியம் பள்ளி, புஞ்சை பாய தொலு ஓடைகாட்டூர், குட்டபாளையம், எடுதீர்கல்பட்டி, தம்புளியம்பட்டி, வேலாயுதபாளையம், கவுண்டம்பாளையம், செம்மேடு, சின்ன காட்டுபாளையம், கொளத்துபாளையம், அக்கறையான் பாளையம், புதுப்பாளையம் மூங்கில் பாளையம் ஓலப்பாளையம் வேட்டுவபாளையம், பட்டக்காரன் பாளையம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் குடிப்பதற்கு மக்கள் பயன்பாட்டிற்கும் தகுதியற்றது என ஆய்வு அறிக்கை கூறுகிறது. எனவே மேற்படி கிராமங்களுக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் அரசுக்கு குடிநீர் வாரியத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us