Singh posts video; Congress leadership in turmoil Photograph: (congress)
ஒரு காலத்தில் ஆளும் கட்சியாகவும் நாட்டின் வலிமையான மிகப் பெரிய கட்சியாகவும் இருந்தது காங்கிரஸ். 2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு பெரும்பாலும் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. காங்கிரஸின் இந்த தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் உட்கட்சிப் பூசல்கள் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சில மூத்த தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி வேறு காட்சிகளில் இணைந்துவிட்டனர். இருப்பினும் காங்கிரஸ் தொடர்ந்து தன்னால் ஆன வகையில் முயன்று தற்சமயத்தில் சில மாநிலங்களில் தங்களுக்கான இருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இவ்வாறாக கட்சியில் பல சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது சில தலைவர்கள் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்களை செய்துவிடுகின்றனர். அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச தலைவருமான திக் விஜய சிங் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வனி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அருகே நரேந்திர தாமோதிர தாஸ் மோடி தரையில் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சாதாரண தொண்டனாக இருந்த ஒரு நபர் மாநிலத்தின் முதலமைச்சராகி, தற்போது நாட்டின் பிரதமராக மாறியுள்ளார். இது தான் அமைப்பின் வலிமை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகள் நிலவி வரும் நிலையில் இப்படியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மக்களவை எம்.பி. சசி தரூர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் கொள்கைகளைப் பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசுவது, காங்கிரசுக்குள் சலசலப்பை ஏற்படுத்திவந்தது. தற்போது திக்விஜய் சிங்கின் பதிவை பாஜக உடனடியாகப் பயன்படுத்திக்கொண்டு, ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கி வருகிறது. சிங்கின் இந்த பதிவு காங்கிரஸ் தலைமைக்கு கொடுக்கும் மறைமுகமான செய்தி எனவும் கூறப்படுகிறது.
Follow Us