சிங்கப்பூர் தொழிலதிபர் ஷேக் சிராஜூதீன். இவருக்குத் தஞ்சாவூர் நகரையொட்டி நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகர், மற்றும் செங்கிப்பட்டியில் பல நூறு கோடிக்கான சொத்துகள் உள்ளது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது மனைவி முகமதா பேகம் (வயது 76) என்பவரிடம் தஞ்சையில் உள்ள அந்த சொத்துகளைப் பராமரிப்பதாக ஸ்ரீவித்யாசுமதி நம்பிக்கையாகப் பேசியதால் சொத்துகளைப் பராமரிக்க அனுமதி கொடுத்துள்ளார்.

Advertisment

ஆனால்,  ஸ்ரீவித்யாசுமதி தனக்குத் தெரிந்த தஞ்சை மைய மாவட்ட ஜெ பேரவைத் தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில் குமாருடன் கூட்டுச் சேர்ந்து மோசடியாகத் தனது உறவினர்கள் பெயருக்குச் சொத்துகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் கேபிள் செந்தில். இது குறித்து மகமதா பேகம் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கேபிள் செந்தில் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment