Advertisment

செஷல்ஸ் நாட்டுடன் சுகாதார கூட்டாண்மை; சிம்ஸ் மருத்துவமனை முயற்சி!

sescelles

SIMS Hospital initiative with Health partnership with Seychelles

சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான முகாம்கள், மருத்துவமனை கட்டமைப்பை உருவாக்க ஆதரவு, டிஜிட்டல் சுகாதார வசலயசமப்பு, மருத்துவ பணியாளர்கள் குழுசவ வலுவாக்குதல், எளிய கட்டணத்தில் மருந்துகள்மற்றும் டயாலிசிஸ் சேவை விரிவாக்கம் குறித்து செஷல்ஸ் நாட்டு அதிபர் ஹெர்மினியின் இந்திய வருகையின் போது கலந்தாலோசனை நடைபெற்றது.

Advertisment

செஷல்ஸ் குடியரசின் அதிபர் டாக்டர் சபட்ரிக் ஹெர்மினி, இந்தியாவின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்துவை, அவரது இந்திய வருகையின் போது சந்தித்துப் சபசினார். செஷல்ஸ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், நீண்டகால அடிப்படையில் சுகாதாரத் தீர்வுகளை வழங்கவும் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பை உருவாக்கவும் இந்நிகழ்வின் சபாது விவாதிக்கப்பட்டது.

Advertisment

இதன் ஒரு பகுதியாக, சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணர்கள் குழு அடுத்த வாரம் செஷல்ஸ் மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்குச் செல்லவுள்ளது. அங்கு தற்போதுள்ள சுகாதார பராமரிப்பு வசதிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து அவற்றை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ளும். மேலும், செஷல்ஸ் மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வசகயில், சிறப்பு துறைகளுக்கான மருத்துவ முகாம்களை நடத்தவும் சிம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் சுகாதாரத்துறையில் முன்னணி நாடாக செஷல்ஸ் – ஐ நிலைநிறுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நோயாளிகளின் தரவு மேலாண்மை, மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகள், மருத்துவ ரீதியில் சிகிச்சைக்கான முடிவெடுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக, செஷல்ஸ் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளை இசணக்கும் ஒரு ஒருங்கிணைந்த, நிகழ்நேர தேசிய டிஜிட்டல் சுகாதார வலையமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த கலந்துரையாடலில் இடம்பெற்றன. மேலும், மருந்தகங்களில் மருந்துகள் இருப்பில்லாத நிலை, விரயம் மற்றும் கொள்முதல் திறமையின்மையக் குறைப்பதற்காக கிளவுட்-அடிப்பசடயிலான நிகழ்நேர சரக்கு மேலாண்மை அமைப்பைச் செயல்படுத்துவதன் மூலம், உயர்தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் அவ்வப்போது நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்கள், மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு, செவிலியர் நியமனம் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் குழுவை வலுப்படுத்துதல் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்த டயாலிசிஸ் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவையும் திட்டமிடப்பட்டிருக்கின்ற செயல் நடவடிக்கைளில் உள்ளடங்கும்.

தற்போதுள்ள அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல், புதிய மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திட்டமிட்டு உருவாக்குதல் மற்றும் மருத்துவமனை வடிவமைப்பு, நோயாளி பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் இந்த சந்திப்பு நிகழ்வின் சபாது கலந்தாலோசிக்கப்பட்டது. கூடுதலாக, எஸ்ஆர்எம் - ன் வெற்றிகரமான கல்வி முறையைப் பயன்படுத்தி, தகுதி வாய்ந்த செவிலியர்களைப் பணியமர்த்துவதுவதில் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. செஷல்ஸ் நாட்டின் சுகாதாரப் பணியாளர்களுக்குத் திறன் பரிமாற்றம் மற்றும் நீண்டகால செயல்திறன் உருவாக்கத்திற்கும் எஸ்ஆர்எம் – ன் திறனும், அனுபவமும் உதவும். தற்போதுள்ள டயாலிசிஸ் பிரிவைச் செயற்கைக்கோள் ஆதரவு சேவைகளுடன் வலுப்படுத்துவதன் மூலம் டயாலிசிஸ் சேவைகளை விரிவுபடுத்துவது, 24 மணி நேர நிபுணர் உதவியை உறுதி செய்வது மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு எளிதாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சையை வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

செஷல்ஸ் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் பேட்ரிக் ஹெர்ர்மினி பேசுகையில், “அரசின் பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துவதும், அனைத்து குடிமக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் எங்களது முக்கிய நோக்கமாகும். உள்கட்டமைப்பு, டிஜிட்டல் சுகாதாரம், பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் டயாலிசிஸ் போன்ற சிறப்புச் சேவைகளை ஆதரிக்கும் கூட்டாண்மைகள், செஷல்ஸில் நீண்டகால அடிப்படையில் உயர்தர சுகாதார சேவைக்கான திறனை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னேற்ற நடவடிக்கைகளாக இருக்கும்” என்றார். இந்த சந்திப்பு குறித்து இந்தியாவின் சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில்,  “உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்கள் முதல் டிஜிட்டல் வலையமைப்புகள் மற்றும் மலிவு விலை மருந்துகள் வரை அமைப்புகளை வலுப்படுத்துவதில் சுகாதார சேவையில் ஒத்துழைப்பு கவனம் செலுத்த வேண்டும். செசஷல்ஸ் நாட்டில் சிறப்பான சுகாதார சேவை கட்டமைப்பை உருவாக்கவும், மேபடுத்தவும் பங்களிக்கக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்து அதிபருடன் பயனுள்ள வகையில் கலந்துரையாடியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார். 

hospital
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe