Silver competes with gold; price hike continues Photograph: (price)
கடந்த மாதம் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த மாத தொடக்கம் முதலே ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த மக்கள் தற்போது அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படுவதில்லை. காரணம் கடந்த 15 தேதியே தங்கத்தின் விலை சவரன் 1 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என ஆண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது. சொன்னது போலவே ஒரு லட்சத்தைத் தொட்டுவிட்டது தங்கத்தின் விலை. அதைப் போலவே வருகின்ற 2026 ம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை இரண்டு லட்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகளை உண்மையாக்கும் வகையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை ஒருபுறம் இவ்வாறு இருக்க வெள்ளியின் விலை இன்னும் வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தங்கம் விலையேற்றத்தைத் தொடர்ந்து சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் கவனம் தங்கத்திலிருந்து வெள்ளியின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போது ஒரு கிராம் வெள்ளி 20 ரூபாய் விலையுயர்ந்து, 274 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளிக்கு ரூபாய் 20,000 விலை அதிகரித்து, 2,74,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே இந்த விலையேற்றத்திற்கான காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் வெள்ளியின் தேவை மற்றும் பயன்பாடுகள் அதிகரித்து இருப்பதும் மற்றொரு முக்கிய காரணமாக் கூறப்படுகிறது. வெள்ளியானது தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுவதும் முக்கிய காரணிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து 13,000 க்கும் சவரன் 1,04,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow Us