Advertisment

எஸ்.ஐ கொலை எதிரொலி ; இரவு ரோந்து காவலர்களுக்கு துப்பாக்கி அவசியம்-பறந்த உத்தரவு

a4687

SI case echoes; Guns are essential for night patrolling guards - order issued Photograph: (police)

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில், மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் மூர்த்தி, அவரது மூத்த மகன் தங்கபாண்டியன் மற்றும் இளைய மகன் மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தங்கபாண்டியனும் மணிகண்டனும் சேர்ந்து தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு தெரிவித்திருக்கின்றனர்.

 

Advertisment
a4679
SI case echoes; Guns are essential for night patrolling guards - order issued Photograph: (police)

 

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், தந்தை-மகன் சண்டையைப் பிரித்து சமாதனம் செய்திருக்கிறார். போலீஸ் வந்ததைப் பார்த்த மணிகண்டன், தோட்டத்தில் சென்று பதுங்கிக் கொண்டார். காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த போது, மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்.ஐ சண்முகவேளை வெட்டிக் கொலை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட சண்முகவேலின் உடல், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கட்டு தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த கொலை தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டிய ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். மூன்றாவது நபரான மணிகண்டன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

a4686
SI case echoes; Guns are essential for night patrolling guards - order issued Photograph: (police)

 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தனக்கு கீழ் பணிபுரியும் காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது தொடர்பாக வெளியான வாக்கி டாக்கி ஆடியோவில் 'இரவு ரோந்து செல்பவர்களுக்கு இதை நான் சொல்கிறேன்.  நீங்கள் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும். எந்த மாதிரியான துப்பாக்கி, எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் சொல்கிறேன்' என அந்த ஆடியோவில் உள்ளது.

'திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காலர்களுக்கு வார விடுமுறை வழங்கவில்லை என்று புகார் வருகிறது. இனிவரும் களங்களில் அதுபோன்ற புகார்கள் வருவதற்கு இடமில்லாமல் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். காவல்துறை துணை ஆணையர்கள் காவலர்களுக்கு உரிய வார விடுமுறை வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை யார் யாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். இனி இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும்' என்று வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளார்.

gun police sub Inspector thirupur udumalai
இதையும் படியுங்கள்
Subscribe