பேக்கரிக்குள் புகுந்த நபர் கியூஆர் கோடை மாற்றி ஒட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisment

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலும் கடைகளில் கியூஆர் கோட் மூலம் ஜி பே, போன் பே உள்ளிட்ட செயலிகளின் மூலம் பணப் பரிவர்த்தனை என்பது இன்று அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில்லறை தட்டுப்பாடுகள் இன்றி கடையில் வாங்கும் பொருட்களுக்கு உரிய பணத்தை மொபைலில் உள்ள பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் கியூ ஆர் கோட் எனும் பிரத்யேக குறியீட்டை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் செலுத்தி வருகின்றனர்.

Advertisment

ஆனாலும் அசால்ட்டாக இருந்தால் அதிலும் மோசடி நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பேக்கரியில் பரபரவென விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பேக்குடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் கடையில் பொருள் வாங்குவதுபோல நோட்டமிட்டுக் கொண்டே திடீரென பணம் செலுத்துவதற்காக வைத்திருந்த கியூஆர் கோட் அட்டையின் மேல் தான் வைத்திருந்த கியூஆர் கோடை மாற்றி ஓட்டியுள்ளார். பின்னர் அந்த இடத்திலிருந்து கேஷுவலாக வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. கடை தரப்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கியூஆர் கோடை மாற்றி ஒட்டிய அந்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.