குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நேற்று (05.12.2025) கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் விசாவதர் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வும், மூத்த தலைவருமான கோபால் இத்தாலியா என்பவர் தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொண்டிந்தார். அச்சமயத்தில் திடீரென ஒருவர் அவர் மீது காலணியை வீசினார். இந்தச் சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேலும் அந்த காணொலியில், குற்றம் சாட்டப்பட்டவரை ஆம் ஆத்மி கட்சியினர் தாக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதோடு அங்கு  இடத்தில் பெரும் பதற்ற  நிலை  நிலவியது. இதனால் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமாதனப்படுத்தினர். இது தொட்ர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காலணி வீசியவர்  சத்ரபால்சிங் ஜடேஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே சமயம் அவருக்கு உடலில் ஏற்பட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் 

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக கோபால் இத்தாலியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “குஜராத் ஜோடோ (யாத்திரை) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நான் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென்று கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து என் மீது செருப்பை வீசி தாக்க முயன்றார். அவர் செருப்பை வீசிய உடனேயே, காவல்துறையினர் விரைந்து வந்து அவரை அழைத்துச் சென்றனர்.குற்றம் சாட்டப்பட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய விரும்பவில்லை. இந்த சம்பவத்திற்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் ஆகும். இது போன்ற விஷயங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பாஜக தடுக்க நினைக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்தாது. இதனால் பாஜகவிற்கும் எந்தப் பயனும் தராது.  

gj-gopal-italiya-ins-1

மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது; அவர்களிடம் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் முழு அமைப்பும் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை தடுக்க விரும்பினால், பொதுமக்களிடம் சென்று அதற்கான பணிகளைச் செய்யுங்கள். எங்களை தாக்குவது. இது போன்று செருப்பு வீசுவதன் மூலம்  பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் தராது” எனத் தெரிவித்துளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து  அவர் தனது, “எக்ஸ்” சமூக வலைதளப் பதிவில், “ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்து வரும் மக்களின் செல்வாக்கு, பாஜக மற்றும் காங்கிரஸை கலக்கமடையச் செய்துள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகப் போராட 2 கட்சிகளும் கைகோர்த்துள்ளன. நாங்கள் பாஜகவின் தோல்விகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறோம். ஆனால் அந்த வலி காங்கிரஸுக்கு ஏன் வருகிறது?. ஜாம்நகரில், ஒரு காங்கிரஸ் தொண்டர் எங்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கோபால் இத்தாலியாவைத் தாக்கினார்” எனத்  தெரிவித்துள்ளார். 

Advertisment