PMK Photograph: (RAMADOSS)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கட்சியில் அதிகாரத்தை யார் கட்டுப்படுத்துவது, பாமகவின் தலைவர் யார் என்கிற மோதலானது வெளிப்படையாக இருந்து வருகிறது.
Advertisment
இந்தநிலையில் ராமதாஸ் நீக்கல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸிடம் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய வரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகின்றனர். கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சி தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us