Shocking pill found near government school - Two arrested Photograph: (police)
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் உயர்தர மெத்தபட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் காவல்துறையினரால் கடத்தல் கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் அரசுப் பள்ளி அருகே இரண்டு நபர்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதைப்பொருளாக விற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை செங்குன்றம் அடுத்துள்ள பாடியநல்லூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் அருகே தினேஷ்குமார், மணி என்ற இருவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் இரண்டு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Follow Us