Shocking information released at Sydney incident that shook the world
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கடற்கரையில் ஹணுக்கா எனும் யூத பண்டிகை நேற்று கடந்த 14ஆம் தேதி கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இது யூதர்களின் பண்டிகை என்பதால் அங்கு 1000 க்கும் மேற்பட்ட யூதர்கள் உட்பட பொதுமக்களும் திரண்டு பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்குகூடியிருந்தோர் மீது, அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்ததை, அடுத்து 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது, அகமது அல் அகமது (43) என்பவர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஒருவரை பிடித்து துப்பாக்கியை பிடுங்கி அவரை தடுக்க முயன்றார். அப்போது மற்றொரு நபர், துப்பாக்கியால் சுட்டதில் அகமது அல் அகமதுக்கு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சஜித் அக்ரம் (50), நவீத் அக்ரம் (24) ஆகிய இருவர் தான் இந்த சம்பவதில் ஈடுபட்டதாகவும், மேலும் அவர்கள் இருவரும் தந்தை, மகன் என்றும் தெரியவந்தது. அவர்கள் இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக, அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்ததாகவும், சம்பவத்தன்று அங்கிருந்த ஒரு சிறிய பாலத்தின் மேல் நின்றுகொண்டு கூடியிருந்த மக்களை சுட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களுடைய காரில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாஜித் அக்ரம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தை விட்டு வெளியேறிய சாஜித் அக்ரம் ஆஸ்திரேலியாவில் குடியேறி அங்கேயே திருமணம் செய்துகொண்டதாகவும் மொத்தமே 2, 3 முறைதான் இந்தியாவிற்கு வந்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 50 வயதான சாஜித் அக்ரம், அவரது 24 வயதான மகன் நவீத் அக்ரம் உடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்டது. சம்பவ இடத்தில் சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us