Shocking incident in Mettur-police investigation Photograph: (salem)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நடு சாலையில் உடல் தனியாகவும் சிறிது தூரத்தில் தலை தனியாகவும் பூசாரி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் உடல் தனியாகவும் சிறிது தூரத்தில் தலை தனியாகவும் கிடந்துள்ளார். விசாரணையில், இறந்து கிடந்தது சின்னக்காவூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பதும் இவர் அதேபகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்தவர் என்பதும் தெரிந்தது.
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு இன்று பிற்பகல் சுமார் நான்கு மணி அளவில் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. தலையும் உடலும் சுமார் 40 அடி தூர இடைவெளியில் கிடந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெங்கட்ராமன் கொலை செய்யப்பட்டாரா அல்லது இரும்பு பிளேட் ஏற்றி வந்த லாரியில் அடிபட்டு இறந்தாரா என்பது தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேட்டூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us