கள்ளக்குறிச்சியில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவருடைய வீட்டின் மொட்டை மாடியில் கொளஞ்சியின் மனைவி லட்சுமி மற்றும் தங்கராசு என்ற இருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். இருவரின் தலைகளும் இல்லாமல் உடல்கள் மட்டும் மொட்டைமாடி பகுதியில் கிடந்தது. இந்த தகவல் அக்கம்பக்கத்தில் இருந்த மக்களுக்கு தெரிய வர உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவு காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட இருவரின் தலைகளும் எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண், பெண் என இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.