கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்தக் குற்றத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

முன்னதாக, போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்போது, கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு டிவிஎஸ் எக்ஸல் வாகனத்தைத் திருடியுள்ளனர். அந்த டிவிஎஸ் எக்ஸல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது, 3 நாட்களுக்கு முன் குற்றவாளிகள் டிவிஎஸ் எக்ஸல்லில் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில், கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

Advertisment

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காலீஸ்வரன் ஆகிய 3 பேரும் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கோவை இருகூர் அருகே வீடு எடுத்துத் தங்கி, கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே, குற்றவாளிகள் போலீசிடம் கொடுத்த வாக்குமூலம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவர்கள் கூறும்போது, "நாங்கள் வாரத்தில் 6 நாட்கள் கட்டிட வேலைக்குச் செல்வோம். ஒவ்வொரு நாளும் தலா 900 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதைச் சேர்த்து வைத்து வாரத்தின் இறுதி நாளில் மது குடிப்போம். அதே போல், சம்பவத்தன்று விமான நிலையத்தின் பின்புறத்தில் மது குடிக்கும்போது அந்தப் பகுதியில், புதிதாக ஒரு கார் வந்து நிற்பதையும், காருக்குள் காதல் ஜோடி இருப்பதையும் பார்த்தோம். அந்த நேரத்தில், தலைக்கேறிய போதையில் இருந்த நாங்கள் அந்த வாலிபரைத் தாக்கி, மயக்கம் அடையச் செய்தோம். அதன்பிறகு, காருக்குள் இருந்த இளம்பெண்ணை இருட்டுக்குள் தூக்கிச் சென்று, அடுத்தடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்தோம். அப்போது அந்த இளம்பெண், என்னை விட்டுவிடுங்கள்.. நான் கல்லூரி மாணவி.. என்றார். ஆனால், நாங்கள் அவளை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்தோம். பின்னர், அங்கிருந்து அன்னூர் வழியாக சிவகங்கை மாவட்டத்துக்குத் தப்பிவிட வேண்டும் என முயன்றோம். ஆனால், அதற்குள் எங்களைப் போலீசார் பிடித்துவிட்டனர்" எனக் குற்றவாளிகள் கூறியுள்ளனர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "அன்று மாலையில் இருந்தே நான்கு நபர்கள் அங்கு மது குடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் பலமுறை இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும்" கூறியுள்ளனர். தொடர்ந்து, கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.