சேலம் மேம்பாலத்தில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மூன்று இளைஞர்கள் தாக்கி செல்போன் பறிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.கிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்பொழுது அவர் பேசுகையில், ''இது ஒரு மோட்டிவில் நடந்த சம்பவம். அந்த மூன்று பசங்களில் ஒருவர் பெயர் ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணன் ஒரு மைனர் பெண்ணுடன் நட்பில் இருந்துள்ளார். ஒரு வருடமாக ஆன்லைன் கேம் சேனல் மூலமாக இருவரும் நட்பில் இருந்துள்ளனர். இந்த சம்பவத்தில் புகாரளித்த புகார்தாரர் பெயர் சுரேஷ். ஆனால் அது போலி பெயர் அவருடைய உண்மையான பெயர் பிரம்ம நாயகம். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். சென்னையில் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இந்த பிரம்மநாயகம், சுரேஷ் என்கின்ற பெயரில் இன்ஸ்டாவில் ஒரு போலி ஐடியை உருவாக்கி உள்ளார். அந்த போலி ஐடி மூலமாக மைனர் பெண்ணுடன் பேசி பழகி உள்ளார். தொடர்ந்து சிறுமியை டார்ச்சர் பண்ண ஆரம்பித்துள்ளார். அந்த சிறுமி ராமகிருஷ்ணனிடம் தனக்கு நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். ராமகிருஷ்ணன் சுரேஷிற்கு பலமுறை  'நீங்கள் அந்த பெண்ணை டார்ச்சர் பண்ணாதீங்க' என தொலைப்பேசி மூலம் வார்னிங் கொடுத்துள்ளார். ஆனால் சுரேஷ் திருந்தாமல் டார்ச்சர் செய்து கொண்டே இருந்துள்ளார்.

அதன் பிறகு ராமகிருஷ்ணன் தாங்க முடியாமல் ஒரு பெண்ணினுடைய பேரில் ஒரு போலியான ஐடி கிரியேட் பண்ணுகிறார். அதன் மூலம் சுரேஷ் என்ற பிரம்மநாயகத்திடம் பழகி சேலத்திற்கு வர சொல்கிறார். அதைக் கேட்டு பிரம்மநாயகம் சேலம்வந்துள்ளார். பின்னர் சேலத்திற்கு அந்த பிரம்ம நாயகத்தின் செல்போனை பிடுங்கி உடைத்து தூக்கிப் போட்டுள்ளனர். இந்த மூன்று பேரின் நடத்திய சம்பவத்தின் பர்ப்பஸ் என்னவென்றால் சிறுமியின் போட்டோ, நடந்த சாட்டிங் எல்லாம் அழிப்பது என்பது தான். அவ்வளவு மோசமாக சிறுமியிடம் அவர் நடந்துகொண்டுள்ளார். என்னிடம் ஒரு ஸ்கிரீன்ஷாட் காண்பித்தார்கள். நான் உங்களுக்கு அதைக்  காட்ட முடியாது. அது வழக்கினுடைய எவிடன்ஸ்'' என்றார்.

Advertisment