Shock at chicken manure plant as three people faint and lose their live Photograph: (kerala)
கேரளாவில் வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் சுத்திகரிப்பு பணியின் போது அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே கோழி கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலையின் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் பணி நடைபெற்று வந்தது. வடமாநில இளைஞர்கள் சுத்திகரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் மூவரும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மூவரில் ஒருவர் அசாம், இருவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.