நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனையொட்டி சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடிகர் சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, சுவாமிநாதன், மா.சுப்பிரமணியம், ரகுபதி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட கலந்து கொண்டனர். சிவாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த மணிமண்டப வளாகத்திலேயே சிறப்புப் புகைப்பட கண்காட்சி ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனையும் தமிழக முதல்வர் பார்வையிட்டார்.