கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கீழக்குப்பம்வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். லாரி ஓட்டுனரான இவருக்கும் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குணசேகரன் லாரி சவாரி போய் வந்து வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்றுவிடுவார். வீட்டிற்கு வந்து செல்லும் போது வீட்டிற்கு தேவையான பொருட்களும் தனது மகன்களுக்கு தேவையான தின்பண்டங்களையும் அதிக அளவில் வாங்கி வந்து கொடுத்து செல்வதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகன்களுக்கு புத்தாடை வாங்கி வந்து கொடுத்ததோடு மகேஸ்வரியை புத்தாடை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். மதுபோதையில் வந்து செல்லும் தனது கணவர் வாங்கி வந்த புத்தாடையை மகேஸ்வரி அணியவில்லை. இதனால் அவர்களுக்குள் 19ஆம் தேதி தகராறு ஏற்பட்டு மகேஸ்வரியை குணசேகரன் அடித்ததாக கூறப்படுகிறது.

Advertisment

அந்த கோபத்தில் மகேஸ்வரி வீட்டிலிருந்து புறப்பட்டு வயலுக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் மகேஸ்வரி வீட்டுக்கு வராததால் அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை தேடி, அவர் சென்ற விவசாய நிலம் பகுதிக்கு நேரில் சென்று தேடிப் பார்த்த பொழுது அங்குள்ள விவசாய நிலத்தின் மகேஸ்வரி சடலமாக கிடந்ததை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து மகேஸ்வரியின் உறவினர்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மகேஸ்வரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்பேரில் மகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகேஸ்வரி கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டது  போலீசாருக்கு தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கணவரை குறிவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மகேஸ்வரி உடல் அருகே கிடந்த சட்டை பட்டன்களை எடுத்த போலீசார் குணசேகரன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, குணசேகரன் அணிந்திருந்த சட்டையில் இருந்த பட்டன்கள் அனைத்தும் சரியாக இருந்தது தெரிய வந்தது. குணசேகரன் அணிந்திருந்த அதே மாடல் பிராண்ட் சட்டை தனது மகன்களுக்கும் வாங்கி வந்து கொடுத்தது தெரியவந்தது. இதனால் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையில் இரண்டாவது மகன் 14 வயதான சிறுவன் அணிந்திருந்த சட்டையல் இருந்த இரண்டு பட்டன்கள் அதில் இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார் 14 வயது சிறுவனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று தனது தந்தைக்கும் தனது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டது.

அவர் அங்கிருந்து போனபின்பு, என்னை அடித்தபோது ''நீ ஏன் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாய்? நீ உன் அப்பானுக்கு சப்போட்டா இருக்கியா'' என கேட்டு என்னை அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவர் நடந்து சென்ற பொழுது பின் தொடர்ந்து சென்று வயல்வெளி பகுதியில் எனது தாயாரை கீழே தள்ளி அவரது கழுத்தில் கைகளால் நெரித்து கொலை செய்ததாக கூறினார். 

இதன்பின் மகேஸ்வரியின் சந்தேக மரணம் குறித்த வாழ்க்கை கொலை வாழைக்காக மாற்றிய போலீசார் சிறுவனை கைது செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறுவனை காடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.