Advertisment

“நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார்” - ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி புகழாரம்!

jayalalithaa-mic-modi-vanakkam

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த தினம் இன்று (24.022026) தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயலலிதாவை அவரது  பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. 

Advertisment

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது  இங்கு இடம் பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், “நமது நாட்டில், சமூக நலனுக்காகப் பணியாற்றியவர்கள். தங்களின் நற்பணிகளில் பொதுமக்களுக்கே முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். (அம்மா) ஜெயலலிதா அத்தகைய மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் ஆகும். இன்றும் நான் தமிழகத்திற்குச் செல்லும்போதெல்லாம், ஜெயலலிதா மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் ஆழமான அன்பை என்னால் உணர முடிகிறது. 

modi-manki-bath-jayalalitha

ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்டாலே தமிழக மக்களின் முகங்களில் ஒரு பொலிவு உண்டாகிறது. குஜராத்தில் நான் பதவியேற்ற விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அவருடைய சிந்தனை மிகவும் தெளிவானதாக இருந்தது”எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள்.

ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார். பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்” எனத் தெரிவித்துள்ளார். 

admk Amit shah Narendra Modi birthday Jayalalithaa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe