Advertisment

“என் இதயம் நொறுங்கிவிட்டது” - சசி தரூர் மகனுக்கு ஏற்பட்ட நிலை!

sasi-tharur-son-ishaan-tharum

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான சசி தரூரின் மகன் இஷான் தரூர். இவர் தி வாஷிங்டன் போஸ்ட் என்ற ஊடக நிறுவனத்தில், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான செய்திப் பிரிவில் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த ஊடக நிறுவனத்தில் வெளியீடு பிரிவு , அதன் விளையாட்டு செய்திப் பிரிவு மற்றும் பல சர்வதேச பணியகங்களை மூடுவது  உள்ளிட்ட பல்வேறு மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் அங்கு பணியாற்றி வந்த மொத்த பணியாளர்களில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை - பிப்ரவரி 4) பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் இஷான் தரூரும் ஒருவர் ஆவார்.

Advertisment

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் நடந்த ஆட்குறைப்பு குறித்து இஷான் தரூர் சமூக ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்திலிருந்து நானும், சர்வதேசப் பிரிவு ஊழியர்கள் பெரும்பாலானோரும் மற்றும் திறமையான சக ஊழியர்கள் பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். எங்களது செய்தி அறையை நினைத்தும், குறிப்பாகச் சர்வதேச அளவில் போஸ்ட் நிறுவனத்திற்காகப் பணியாற்றிய ஈடு இணையற்ற பத்திரிகையாளர்களுக்காகவும் நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன் (I’m heartbroken - என் இதயம் நொறுங்கிவிட்டது). 

Advertisment

கடந்த 12 ஆண்டுகளாக எனது நண்பர்களாகவும், சக பணியாளர்களாகவும் இருந்த ஆசிரியர்கள் (editors) மற்றும் செய்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வாசகர்கள் உலகத்தையும், அதில் அமெரிக்காவின் இடத்தையும் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில், ஜனவரி 2017இல் நான் 'வேர்ல்ட்வியூ' (WorldView) கட்டுரையைத் தொடங்கினேன். பல ஆண்டுகளாக வாரத்திற்குப் பலமுறை இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசித்த அரை மில்லியன் (5 லட்சம்) விசுவாசமான சந்தாதாரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ishaan Tharoor sasi tharoor layoff journalist
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe