Advertisment

34 வயது பெண்ணை எ@ரி@த்துக் கொ@ன்ற 18 வயது இளைஞர்; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

ben-sharmila

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ராமமூர்த்தி நகரில் உள்ள சுப்ரமணியா லேஅவுட்டில் உள்ள குடியிருப்பில் ஷர்மிலா (வயது 34) தனியாக வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் துறையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். ஷர்மிலாவின் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் கிருஷ்ணய்யா (வயது 18) எனபவர் வசித்து வந்தார். மேலும், கிருஷ்ணய்யாவும் ஷர்மிலாவும் நன்றாக பழகி வந்தததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷர்மிலா, அவரது வீட்டில் கடந்த 3ஆம் எறிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீடு முழுவதும் தீ பரவியதால் மூச்சடைப்பு ஏற்பட்டு ஷர்மிளா இறந்திருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து  நடைபெற்ற பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஷர்மிளா சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மூச்சடைத்து இறக்கவில்லை என்றும் மாறாக, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். 

Advertisment

இதன் காரணமாக மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்,  எதிர் வீட்டில் வசித்து  வந்த கிருஷ்ணய்யாவும்  ஷர்மிளாவும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் கிருஷ்ணய்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கிருஷ்ணாவும் ஷர்மிளாவும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருப்பினும், கிருஷ்ணய்யாவிற்கு ஷர்மிளா மீது விருப்பம் இருந்துள்ளது. இது காலப்போக்கில் ஒருதலைப்பட்சமான காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி கிருஷ்ணய்யா ஜன்னல் வழியாக குதித்து ஷர்மிளாவின் வீட்டிற்குள் சென்றுள்ளார் . 

siren-police

அவ்வாறு வீட்டிற்குள் சென்றவர் ஷர்மிளாவிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அதிச்சியடைந்த ஷர்மிளா அவரிடம் இருந்து தன்னை தற்காத்துக்கு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது, அவர் அந்தப் பெண்ணின் வாயையும் மூக்கையும் வலுக்கட்டாயமாக மூடியதாகவும், அதனால் அவர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, ​​ஷர்மிளாவிற்கு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதே சமயம் குற்றவாளி அப்பெண்ணின் உடைகள் மற்றும் பிற பொருட்களை படுக்கையறை மெத்தையின் மீது வைத்து, தீ வைத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.  தப்பிச் செல்லும்போது பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனையும் திருடிச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.   

மேலும் குற்றவாளியின் வாக்குமூலம் மற்றும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களைத் தொடர்ந்து, அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 103(1) (கொலை), 64(2), 66, மற்றும் 238 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Bengaluru incident karnata Police investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe