தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்ட ஒழுங்கு டிஜிபி யாக சங்கர் ஜிவால் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சங்கர் ஜிவால் நாளை மறுநாளுடன் (31.08.2025) பணி ஓய்வு பெறவுள்ளார். இன்று (29.08.2025) அவரது கடைசி பணி நாள் ஆகும். எனவே இன்று மாலை அவருக்கான பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஓய்வு பெற உள்ள டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணைய (Fire Commission) தலைவராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக அரசின் கூடுதல் nakதலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதையொட்டியும், தீ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2025) பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.