தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பொழிந்து வருகிறது.
Advertisment
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
அதேபோல இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை காண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக். 20ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  
சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பொழிந்து வரும் நிலையில் சென்னை பட்டாளம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பட்டாளம் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. அந்த பகுதி பிரபலமான ஆஞ்சநேயர் கோவில் ஒன்றுள்ளது. அந்த கோவிலுக்குள் கழிவு நீர் புகுந்துள்ளது. மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதன் காரணமாக துர்நாற்றம் மற்றும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள அந்த பகுதி மக்கள் உடனடியாக நீரை அகற்றுவதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisment