Advertisment

கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு? : உணவகங்கள் பாதிப்பு!

gas-cylinder-price

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு இறக்குமதியில் 85 முதல் 90% வரை மத்திய கிழக்கு நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மத்திய அரசு அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக கூறப்படுகிறது. இதற்கிடையே பொதுமக்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தற்போதைய சூழலைச் சமாளிக்கத் தேவையான சமையல் எரிவாயுவிற்கான இருப்பு உள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

Advertisment

இத்தகைய சூழலில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்படும் 19 கிலோ வணிக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மற்றொருபுறம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் சமையலுக்கான 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்போது வரை சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பதுக்கலைத் தவிர்க்க இரு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது

domestic-gas

முன்னதாக மார்ச் 7ஆம் தேதி முதல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 60 வரையிலும், வணிக சிலிண்டர் விலை ரூ. 115 வரையிலும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேஸ் சிலிண்டர்கள் போதிய அளவு கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தாலும், தட்டுப்பாடு குறித்த செய்திகளால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.இது குறித்து மத்திய  அரசு அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஓட்டல்கள் சங்கம் சார்பாக நேற்று (09.03.2026) இரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், “இன்னும் ஒரு சில தினங்களுக்குத்தான் வணிக சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளது. அதன் பிறகு ஹோட்டல்களை மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்று” தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

restaurants hotels shortage gas cylinder gas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe