Advertisment

செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பான வழக்கு; அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

sc-ani

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.  அதே சமயம் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. 

Advertisment

இதனையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜி தரப்பும் கடுமையான வாதங்களையும் பிரதிவாதங்களையும் முன் வைத்தன.  இதனையடுத்து செந்தில் பாலாஜி பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதில், “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். 

Advertisment

ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும், குற்றவியல் நடைமுறைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்” எனத் தெரிவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஜாமீன் மீதான நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய வழக்கு இன்று (08.12.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் சங்கர் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமை என இரு நட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக ஆஜராகி வருகிறார். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறுகிறீர்கள். 

senthil-balaji-dmk

இதை எப்படி எடுத்துக் கொள்வது?. ஒவ்வொரு வாரமும் அமலாக்கத்துறை அதிகாரியும் இதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இது அவருக்கும் வழங்கப்படக் கூடிய ஒரு வகையான தண்டனை தான். வரும் திங்கள், அல்லது வெள்ளிக்கிழமை செந்தில் பாலாஜி எதற்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும்?. அதற்கான நியாயமான காரணத்தை கூறுங்கள். மாதத்திற்கு ஒரு முறை மட்டும் அமலாக்க்கத்துறை  அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் ஆனால் போதும் என  கட்டுப்பாடுகளை தளர்த்தட்டுமா?” என அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். இதனையடுத்து கட்டுப்பாடுகளை தளர்த்த அமலாக்கத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.

அதன்படி செந்தில் பாலாஜிக்கான அனைத்து நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மட்டுமே அமலாகத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் எனவும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  

bail Conditional bail ram shankar Supreme Court V. Senthil Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe