Advertisment

மூதாட்டியிடம் வழிப்பறி; தவெக பிரமுகர் கைது

A5277

Senior TVK official arrested for robbing elderly woman Photograph: (THIRUVANNAMALAI)

திருவண்ணாமலையில் மூதாட்டி ஒருவரிடம் லிப்ட் கொடுப்பதாக ஏமாற்றி நகைப் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஒண்டிக்குடிசை பகுதியில் வசித்து வருபவர் மலர். 61 வயது மூதாட்டியான இவர் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது லிப்ட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கு வந்த ஒரு நபர் உதவும் வகையில் பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் திடீரென பாதி வழியில் பைக்கை நிறுத்திய அந்த நபர், மூதாட்டியை கீழே இறக்கிவிட்டு அவருடைய நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி மலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைப்பறிப்பு நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையின் அடிப்படையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரமுகரான கவுதம் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

CCTV footage chain snatching old lady police thiruvannaamalai tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe