மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக் பணியாற்றி வந்தவர் பீலா வெங்கடேசன் (வயது 56) ஆவார். இவர் உடல் நலக் குறைவு காரணமாகக் கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி இன்று (24.09.2025) பரிதாபமாக உயிரிழந்தர்.
மறைந்த பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரானா நோய்த் தொற்று காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளராகச் சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் கவனத்தை ஈர்த்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/24/beela-venkatesan-2025-09-24-20-12-08.jpg)