Advertisment

'எந்த சக்தியாலும் தடுக்க இயலாது; விஜய் கை காட்டுபவர் தான் எம்.எல்.ஏ'-செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

230

tvk Photograph: (politics)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

கூட்டணி குறித்த பரபரப்பு ஆலோசனைகள் அரசியல் கட்சிகளில் தொற்றியுள்ளது. இந்நிலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், ''சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மை பொறுத்தவரையில் தலைவர் எங்கே விரல் காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாட்டில் யாராலும் மாற்றிகாட்ட முடியாது. இதை சொல்வதற்கு காரணம் எல்லோரும் நினைத்தார்கள் திரைப்படத்திலே அவர் ஹீரோ. ஒரு எதிர்காலத்தில் தமிழ்நாட்டுடைய அரசியல் ஹீரோவாக அவர்தான் வரப்போகிறார். இதுதான் அரசியல்  வரலாறு நடக்கப் போகிறது.

மனிதநேயத்தோடு 500 கோடி ரூபாயை இழந்துவிட்டு மக்கள் பணியாற்றுகிற சேவைக்காக வந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு தலைமை அவர். ஆகவே எல்லோரும் விஜய்யை ஏற்றுக்கொள்கிறார்கள். திமுகவை சேர்ந்தவர்கள் வீட்டில் இருக்கிறவராக இருந்தாலும் சரி, எந்த வீட்டில் இருக்கிறவராக இருந்தாலும் சரி நாங்கள் விசாரிக்கும் போது தெரிகிறது. எல்லா கட்சியில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களும் 'நான்கு ஒட்டு இருந்தால் இரண்டு ஓட்டு விஜய்க்குத்தான்' என்கிறார்கள். பின்னர் எப்படி மற்றவர்கள் ஜெயிப்பார்கள்.

ஓட்டு மூன்றாக பிரியப் போகிறது. மூன்றாக பிரிந்தால் என்ன ஆகும். சில பேர் டெபாசிட் இழப்பார்கள். சில பேர் தேர்தலில் நிற்பதற்கு தயக்கம் காட்டுவார்கள். சில பேர் பணத்தை இழப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள். நாம் பணமில்லாமலே வெற்றி பெறக்கூடிய ஒரு இயக்கம்தான் நம் இயக்கம். நம் வெற்றி எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. எங்கே சென்று கேட்டாலும் அவருக்குதான் ஓட்டு. அதைவிட நான் பல இடங்களில் பேசினேன்.

பல நாடுகளில் இருந்து எப்போது தேர்தல் வரப்போகிறது. இதுவரை நான் காணாத ஒரு காட்சி காணப்போகிறோம். 3 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து விஜய்க்கு வாக்களிப்பதற்காக வர இருக்கிறார்கள். 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் செலவு செய்துவிட்டு ஒரு வாக்களிப்பதற்காக இங்கே வருகிறார்கள் என்று சொன்னால் இந்த விஜய்யை மிஞ்சுவதற்கு இனி இந்தியாவில எவருமே இல்லை. காலங்கள் மாறி கொண்டிருக்கிறது ஆட்சி மாற்றங்கள் தேவைப்படுகிறது. நல்லாட்சி தமிழகத்தில வரப்போகிறது. தூய்மையான ஆட்சி தமிழகத்தில உருவாக்குவதற்காகதான் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் மாற்றி காட்ட முடியாது' என்றார். 

Election k.a.sengottaiyan politics tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe