அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று (07.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.  

Advertisment

அப்போது அவர், “நாடாளுமன்ற தேர்தலில் நமக்காக யாரெல்லாம் உதவி செய்தார்களோ,  எந்த காலகட்டத்தில் நமக்காக வழிவகை  செய்தார்களோ அவர்களையெல்லாம் மறந்து அவர்களுக்கு  நிற்பதற்கு  அனுமதி வழங்காமல் புதிதாக  வேறு கட்சியில் இருந்து வந்து பணம்  செலவு செய்தால் போதும் என்று  அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில்  நிற்பதற்கு அனுமதியை வழங்கியவர் யார்?  இதையெல்லாம் மக்கள் இன்றைக்கு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.  முதலிலேயே  இவர் முதலமைச்சர் ஆவதற்கு வழிவகை செய்தவர்  அன்றைய பொதுச்செயலாளர் சசிகலா தான். அவரைப் பற்றி கொச்சையாக பேசினார் . வளர்த்த கடா மார்பிளை மாய்வதை போல அரசியல் நாகரிகம் என்பது நம்மை வளர்த்தவர்களே   பேசக்கூடாது என்று நான் அவரிடம் சொன்னேன்.  

Advertisment

அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக 18 பேர்கள் நமக்கு தேவைப்பட்டது.  டிடிவி தினகரனுடைய அந்த 18 சட்டமன்ற உறுப்பினர் நமக்கு உறுதுனையாக இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் 122 பேர்கள் சட்டமன்ற பேரவையினுடைய தலைவர் முன்னால்  ஒருமனதாக இவரை  கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு  அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டது.  அதற்கு பிறகு டிடிவி உடைய 18 பேர்களையும் கழகத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கப்பட்டார்கள்.  அதற்குப் பிறகு ஆட்சியை நடத்துவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கிற போது தர்ம யுத்தத்தை  நடத்திக் கொண்டிருக்கிற ஓபிஎஸ்ஸை அழைத்து, நீங்கள் 11 பேரும்  எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் ஒரு  ஒருங்கிணைப்பாளர் நான் இணை ஒருங்கிணைப்பாளர், நான் முதலமைச்சர் நீங்கள் துணை முதலமைச்சர் என்று சொல்லி  அவரையும் அந்த நிலைக்கு கொண்டு சென்று  காலம் கடந்ததற்கு பிறகு அவரையும்  வெளியேற்றினார் .  

அதற்குப் பிறகு  நம்மை அந்த அளவிற்கு நான்கு  ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலே அமரவைத்து நம்மை பாதுகாத்த  பா.ஜ.கவுக்கு 2024ல்  இந்தியாவே  என்ன செய்யப்போகிறது என்று தத்தளித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் தான் பிரதமர்  நரேந்திர மோடியை கொண்டுவர வேண்டும்  என்ற நேரத்தில் அன்றைக்கு வாபஸ் பெற்றார். அதிமட்டுமல்லாமல், இனிமேல் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்றும் 2026யும் இல்லை, 2031லும் இல்லை என்று சொன்னார். சொல்லி முடித்துவிட்டு, எந்த இயக்கம் இன்றைக்கு தமிழகத்திலே தடை செய்யப்பட்டிருக்கிறோ அந்த இயக்கத்திற்கு  சென்று தொப்பியை போட்டுக் கொண்டு உரையாற்றினார்.  நடந்த காலத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதைவிட விமர்சனம் எங்களால் செய்ய  முடியும். இன்றைக்கு இந்த  இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்  கொண்டிருக்கிற நிர்வாகிகளுக்கு இருக்கிற  இடற்பாடுகள் என்ன என்றால் 45 வயது உட்பட்டவர்கள் மட்டும் தான் பூத்  கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஒரு  நிலையை அவர் பிரகடனப்படுத்தினார் .  

Advertisment

கூடுதல்  வயது இருந்தால் இந்த இயக்கத்திற்காக  தங்களை அர்ப்பணித்து கொண்டு மக்களை  அடையாளம் தெரிந்தவர்களையும் ஒரு நான்கு  பேர் போட்டுக்கொள்ளலாம் என்று கூட  கேட்டோம். இல்லை, இல்லை 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இருக்க வேண்டும் என்று  சொன்னார். இந்த இயக்கத்திற்காக 1972ல்  இருந்து ஜெயலலிதா காலத்திலிருந்து பல்வேறு  பொறுப்புகளை வைத்துக் கொண்டிருக்கிற  ஊராட்சி மன்ற துறை, கூட்டுறவு துறை,  பல்வேறு துறைகளிலே பணியாற்றிக்  கொண்டிருப்பதற்கு அந்த வாய்ப்பில்லை.   அதோடு  மட்டுமல்லாமல், இன்றைக்கு இவர் கட்சியை நடத்தவில்லை. இவர் கட்சியை நடத்தவதை விட  இவருடைய மகன், இவருடைய மாப்பிள்ளை  இவருடைய மருமகன், இவருடைய அக்கா மகன் தான்  நடத்துகிறார்கள். இதெல்லாம்  எங்களுக்கு தெரியாத ஒன்னு இல்லை. நான்  சொல்லவே வேண்டியதில்லை. இந்த நிலை  நீடித்துக் கொண்டிருக்கிறது. அப்படி  என்றால் அந்த இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்கள், இந்த இயக்கமே உயிரென்று  நேசித்தவர்கள் , இந்த இயக்கத்தை பற்றி தெரியாத  இடத்திலே சென்று மண்டியிட வேண்டிய காலம்  இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.