அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் கூட்டாக முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்றது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியது. அதனை தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

Advertisment

எம்.ஜி.ஆர், அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து, செங்கோட்டையனும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்த பரபரப்பான நிலையில், செங்கோட்டையன் தேர்தல் ஆணையத் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுக பிரிவு உண்மையான அதிமுக இல்லை என்றும், கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.